ஞாயிறு பள்ளி ஊழியம்:

நோக்கம்:

சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.(மத்தேயு.19:14)

இந்த வார்த்தைகளை கூறியவர், பூமிக்கு வார்த்தையாக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. ஆம். அழிந்த போகிற ஆத்மாக்களை சின்ன வயதிலிருந்தே கர்த்தருக்கு நேராக வழி நடத்திவிட்டால், அவர்களை பிசாசின் வலையிலிருந்து காப்பாற்றி விடலாம். இதை மனதில் கொண்டு, தேவன் காட்டிய தரிசனத்தின் அடிப்படையில்தான் ஞாயிறு பள்ளி ஊழியத்தை தொடங்கினோம்.

திட்டம்:

பல இடங்களில் தொடங்கப்பட்டு, சகோதரர்களின் ஜெபத்தினாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமும், இந்த ஊழியம் ஜெயமாக நடைபெறுகிறது. இந்த ஊழியத்தின் மூலம் தேவ ஊழியர்கள், சாட்சியுள்ள தேவ பிள்ளைகள், தேவ பயமுள்ள குடும்பங்கள், சபைகள் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எங்களின் இலக்காக வைத்துள்ளோம்.

தேவைகள்:

இந்த ஊழியத்தில் எங்களை ஜெபத்தில் தாங்க, எண்ணற்ற ஜெப வீரர்கள் தேவை. ஆத்ம பாரமுள்ளவர்களின் ஜெபம், கர்த்தரின் செவிக்கு விரைவில் எட்டி சேரும் என்று நம்புகிறோம். மேலும் கர்த்தருக்காக பிள்ளைகளின் மத்தியில் ஊழியம் செய்ய விரும்புவோருக்கு தேவன் மனதில் ஏவுதல் அளித்தால் எங்களை தொடர்பு கொண்டு, இந்த ஊழியத்தில் இணையலாம்.

சிறைச்சாலை ஊழியம்:

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்(யோவான்.8: 36)

நோக்கம்:

சாதாரண மக்களுக்கு சுவிசேஷம் கேட்க, அதற்கு கீழ்படிய, கர்த்தருக்குள் வளர எவ்வளவோ வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கு, இரட்சிப்பின் கதவு திறக்கப்படுவதே அபூர்வம்தான். அதிலும் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலே கூட போகலாம். எனவே சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கு சுவிஷேசம் அறிவிக்க வேண்டும் என்ற ஆத்மபாரம் எங்களில் ஏற்பட்டதன் விளைவே, இந்த சிறைச்சாலை ஊழியத்தின் துவக்கம்.

திட்டம்:

சிறைச்சாலைகளில் நடத்தப்படும் ஜெபக் கூடுகைகள் மூலம் குற்றவாளிகள் மனந்திரும்ப வேண்டும். கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, உலக வாழ்க்கையில் அவர்கள் கைவிடப்பட்டு துயரப்பட்டாலும், பரலோக ராஜ்ஜியத்தில் எட்டி சேர வேண்டும் என்பதே எங்களின் மேலான வாஞ்சை.

தேவைகள்:

சிறைச்சாலைகளில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்த அனுமதி கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் பல மனநிலைகளில் உள்ள கைதிகளிடம் சுவிசேஷம் அறிவிக்க பரிசுத்தாவியின் அபிஷேகம் தேவை. எனவே இந்த ஊழியத்திற்காக கருத்தாய் ஜெபிக்கிற ஜெப வீரர்கள் தேவை.

கிராம ஊழியம்:

அவர் பட்டணங்கள் தோறும், கிராமங்கள் தோறும் பிரயாணம் பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார்.(லூக்கா. 8:1).

நோக்கம்:

கிராம ஊழியம் என்பது பலதரப்பட்ட மக்களை சந்தித்து சுவிஷேசம் அறிவிக்கும் செயலாகும். இதன்மூலம் இயேசுவை பற்றி அறியாத மக்களுக்கு தேவனின் விலையேறப் பெற்ற இரட்சிப்பை குறித்து அறிவிக்கலாம். இதை முன்நிறுத்தியே கிராம ஊழியம் துவங்கப்பட்டது.

திட்டம்:

இந்தியாவின் முதுக்கெலும்பான கிராமங்களை கிறிஸ்துவிற்கு சொந்தமாக்கிவிட்டால் தேசத்தில் சுவிஷேச பணி எளிதாகிவிடும். அதை விசுவாச கண்களால் கண்டு கொண்டு, பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலும் அவ்வப்போது சென்று ஊழியங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தேவைகள்:

கிராம ஊழியங்களில் முக்கிய பங்கு வகிப்பது கைப்பிரதி ஊழியம். இது மிக எளிய ஊழியமாக தோன்றினாலும், பலதரப்பட்ட மக்களிடையே, அதுவும் படிக்க தெரியாதவர்கள் இடையே இந்த ஊழியத்தை செய்வது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு விளக்கம் அளித்து சுவிஷேசம் சொல்ல வேண்டும்.

அதற்கு எதிர்ப்புகள் தோன்றினாலோ, வாக்குவாதம் ஏற்பட்டாலோ அதை சமாளிக்க வேண்டிய தேவ வல்லமையும், ஞானமும் தேவை. இன்றைய எதிர்ப்புகளுக்கு இடையே கிறிஸ்துவின் சுவிஷேசம் அறிவிக்க, தேவ வைராக்கியமும், தைரியமும் உள்ள எலியாக்கள் தேவை. இதற்காக ஜெபிக்க ஆத்மபாரமுள்ள ஜெப வீரர்கள் தேவை.

வாலிபர் ஊழியம்:

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுவதினால் தானே.” (சங்கீதம். 119: 9)

நோக்கம்:

மனிதனுடைய வாழ்க்கையில் இன்பமான காலம் என்பது வாலிப வயது தான். இந்த வயதில் எது சரி, எது தவறு என்பதை அறியாமல் தவறான பாதையில் சென்று வாழ்க்கையை இழந்து தவிக்கும் வாலிபர்கள் ஏராளம். எனவே அழிவின் பாதையில் செல்லும் வாலிபர்களை, கர்த்தரிடத்திற்கு கொண்டு வந்து மெய்யான சந்தோஷமும், சமாதானமும் அடைய செய்ய வேண்டும் என்ற வாஞ்சையில்தான் வாலிப ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது.

திட்டம்:

சத்திய பாதை அறியாமல் அலைந்து திரியும் வாலிபர்களுக்கு நல்வழி காட்டும் அதே நேரத்தில், கர்த்தரின் பட்சத்தில் உள்ள வாலிபர்கள் காப்பாற்றப்பட வேண்டியதும் அவசியமாகும். இதற்காக வாலிப கூடுகைகள், சுவிஷேசக் கூட்டங்கள் ஆகியவை படிபடியாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அழிந்து போகிற ஆத்மாக்களின் பட்டியலில் உள்ள வாலிபர்கள், மனந்திரும்பி கிறிஸ்துவின் சேனையாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் திட்டம்.

தேவைகள்:

உலக சிற்றன்பங்களில் சிக்கித் தவிக்கும் வாலிபர்களை, சத்திய மார்க்கத்தில் கொண்டு வருவதற்கு பரிசுத்தாவின் வல்லமை தேவை. இந்த ஊழியத்தில் ஈடுபடுபவர்களுக்காக கண்ணீரோடு, உபவாசத்தோடு, முழங்காலில் நின்று ஜெபிக்கும் ஜெபம் தேவை.

வெப்சைட் ஊழியம்:

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங்கீதம்.1:2)

நவீன காலத்தில் பல ஊடகங்களின் மூலம் தேவ வசனம் விரைவாக பரப்பப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது இன்டர்நெட் என்ற இணையதளம். தினமும் வேதம் படித்து, கர்த்தருடைய வார்த்தையை பெற்று கொள்ள இன்றைய இளம்தலைமுறைக்கு நேரம் கிடைப்பதில்லை.

இதனால் இன்டர்நெட்டில் வேதத்தை படிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்டர்நெட் மூலம் எல்லா வயதினருக்கும் ஏற்றது போல, வேத வசனங்களை, அளிப்பதே இந்த ஊழியத்தின் நோக்கம். மேலும் ஜெப வீரர்களை ஒருமுகப்படுத்தி ஜெபிப்பது, தேவ ஐக்கியத்தை வளர்ப்பது ஆகியவை முக்கிய நோக்கங்கள் ஆகும்.

வேலைச் செய்யும் இடத்தில், வீட்டில், பயணத்தில், சிக்கலான நேரங்களில் என எந்த சந்தர்ப்பத்திலும் தேவனோடு நெருங்கியிருக்க உதவுவதே இந்த ஊழியத்தின் இலட்சியம்.

ஜெபத்தில் இந்த ஊழியங்களையும், ஊழியத்தில் பங்கேற்பவர்களையும் நினைவு கூற வேண்டும் என்பதே எங்களின் தேவை.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்