தேசத்தின் இரட்சிப்பு:

நம் வாழும் தமிழகத்தையும், நம் நாடு இந்தியாவையும் தேவன் இரட்சிக்க வேண்டும். நாளுக்கு நாள் பாவம் பெருகி வரும் இந்தக் காலத்தில் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கும் தேவ ஊழியர்கள் எழும்ப வேண்டும்.

-----------------

சங்கர், பெங்களூரு.

சில குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்திற்கும் மேலாக கடன் வாங்கியுள்ளேன். இந்த கடன் பாரத்தில் இருந்து தேவன் என்னை விடுவிக்க வேண்டும். மேலும் எனது குடும்பத்தினர் எல்லாரும் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அவர்களும் தேவனை அறிந்து, இரட்சிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள்.

--------------------

ராணி, பெங்களூரு.

எனது உடலில் ஆங்காங்கே அலர்ஜி போல தோன்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். இது ஒரு வகை தோல் வியாதி என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். என்னை இரட்சித்த தேவன், இன்றும் சுகமாக்க வல்லவராக இருக்கிறார் என்பதை விசுவாசித்து, எந்த மருந்தும் நான் சாப்பிடவில்லை. தேவன் இந்த நோயிலிருந்து பூர்ண சுகமளித்து, என்னை ஒரு அற்புத சாட்சியாக நிறுத்த எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

“ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு

ஜெபிக்காத மனிதன் உயிரில்லாத உடல்”

என்ற ஒரு வாய்மொழி சொல்லை நம்மில் அநேகரும் கேட்டிருக்கிறோம். கூரை இல்லாத வீடு என்பது பாதுகாப்பற்ற நிலையை குறிக்கிறது. அதேபோல உயிரில்லாத உடல் இருந்தும் பயனற்றது. மற்றவர்களுக்கு நாற்றம் வீச தொடங்கிவிடும். எனவே நம் வாழ்க்கையில் ஜெபம் இல்லாவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த பாதுகாப்பும் இல்லாமல், மரித்த நிலவரத்திற்கு தள்ளப்பட நேரிடும் என்பதை உணர முடிகிறது. 

www.arisenshine.in என்ற இந்தக் கிறிஸ்துவ தமிழ் இணையதளத்திற்கு வந்துள்ள உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம்.

உலகமெங்கும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயன்படும் செய்திகள், சிந்தனைகள், தியானம், சாட்சிகள் ஆகியவற்றை வெளியிடும் நோக்கில் இந்த இணையதளம் இயங்கி வருகிறது.

இது எந்த சபையையோ, ஊழியத்தையோ சார்ந்தது அல்ல என்பதோடு, எந்த சொந்த ஆதாயத்திற்காகவும் நடத்தப்படுவது அல்ல.

எனவே இந்த இணையதளத்தில் வரும் செய்திகளைப் படித்து, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

- - - - - - - - -

இந்த இணையதளத்தில் வரும் செய்திகளைக் குறித்த உங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.

- - - - - - - -

இந்த வார வேதப்பாடம்:

நாம் ஜெபிக்கிற ஜெபம் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ள இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.

இந்தவார அனுபவ சாட்சி:

கூலி தொழிலாளி ஒருவரின் வாழ்வே இருண்டு போக வேண்டிய தருணத்தில் இருந்து தேவன் பாதுகாத்த ஒரு அற்புதமான சாட்சியைக் கிளிக் செய்து படியுங்கள்.

இந்த வார சிந்தனை:

கிறிஸ்தவர்கள் நகைகளைப் போடுவது சரியா? தவறா? என்ற சந்தேகத்திற்கான தீர்வை அளிக்கும் ஒரு செய்தியை கிளிக் செய்து படியுங்கள்.

கொடும் பாவியான என்னை, இயேசு மீட்டார்

நாகப்பட்டினத்தில் இருந்து மதியழகன் என்ற சகோதரன் கூறுகிறார்...

எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்களை வணங்கும் ஒரு மார்க்கத்தில் அதிக நம்பிக்கைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்டேன். சிறு வயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், பள்ளிப் படிப்பைக் கூட நான் முடிக்கவில்லை.

கர்த்தருக்குள் அன்பான எல்லா வாசகர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். நம்மை அழைத்த தேவன் முடிவு வரை வழிநடத்த வல்லமை உள்ளவர் என்பதை ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் உணர்ந்து வருகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளாக www.arisenshine.in இணையதளத்தை நடத்துவதற்கு எங்களுக்கு அளித்த தேவ கிருபைக்காக நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறோம். இணையதளத்திற்காகவும் எங்களுக்காகவும் ஜெபித்த எல்லா வாசகர்களுக்கும் கிறிஸ்து இயேசுவிற்குள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். வெற்றிகரமான மூன்றாவது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க, எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த எல்லாருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

நம் இணையதளத்தின் பேஸ்புக் பக்கத்தில், பல தேவ ஊழியர்களும் தொடர்ந்து ஆவிக்குரிய சிந்தனைகளை அனுப்புவதை எண்ணி மகிழ்கிறோம். மேலும் சிலர், பல பயனுள்ள ஆவிக்குரிய செய்திகளையும், அதற்கான லிங்குகளையும் அனுப்புகிறார்கள். அவை அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்பதைக் கூற விரும்புகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளில் பல ஆவிக்குரிய செய்திகளையும் அனுபவங்களையும் சாட்சிகளையும் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள கர்த்தர் உதவி செய்தார். இதில் பல செய்திகளைக் குறித்த சந்தேகங்களையும் கூடுதல் விளக்கங்களையும் கேட்டு, பலரும் இமெயில் அனுப்பினார்கள். வாட்ஸ்அப்பில் கேட்டார்கள். தேவ செய்திகளின் மூலம் அடைந்த நன்மைகளைக் குறித்தும் சிலர் பகிர்ந்து கொண்டனர்.

எங்களுக்கு வந்த இமெயில்களில், பெரும்பாலானோர் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரு கேள்விக்கு இங்கே விளக்கம் அளிக்க விரும்புகிறோம். அந்தக் கேள்வி என்னவென்றால், நம் இணையதளத்தில் பல நாட்களாகச் செய்திகள் எதுவும் வெளியிடப்படாமல் அவ்வப்போது விடப்படுவது ஏன்? என்பதாகும்.

இதற்கு முக்கியமாக காரணமாக, இணையதள சர்வரில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனையைக் கூறலாம். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஞாயிறு பள்ளி ஊழியத்தை மேலும் பல இடங்களுக்கு விரிவுப்படுத்தியதால், சகோதரர்களால், இணையதளத்தில் சரியான நேரத்தில் செய்திகளை வெளியிட முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

அதேபோல பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுவிலும் பல நாட்கள் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் இந்த ஊழியத்தில் புதிதாக இணைந்தவர்களைக் கொண்டு, இணையதளத்தைக் கையாள வைக்க அஞ்சுவதால், சில நேரங்களில் தேவ செய்திகளை வெளியிடுவது தடைப்படுகிறது. வரும் நாட்களில் இந்தக் குறையை நிவர்த்தி செய்து, கடைசிக்கால தேவ ஊழியத்தை மேன்மையாக செய்ய, எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.

பேஸ்புக் மற்றும் வாட்அப் குழுவிற்கு புதிதாக பலரும் இணைந்து வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில் நம் இணையதளத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் உங்கள் நண்பர்களைச் சேர்க்க விரும்பினால், அவர்களின் நம்பர்களை அட்மின் பொறுப்பில் உள்ள சகோதரர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் விரைவில் குரூப்பில் சேர்த்து விடுவார்கள். அனுப்பும் போது, சேர்க்க வேண்டிய நபரின் பெயர் மற்றும் வாட்ஸ்அப் நம்பரை குறிப்பிட்டு, Arisenshine.in குரூப்பில் சேர்க்கவும் என்று அனுப்புங்கள்.

மேலும் இணையதளத்தில் வெளியான பல செய்திகளை வீடியோ வடிவில் உருவாக்கி, யூடியூப் பக்கத்தில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டோம். அதை வரும் நாட்களில் முழு மூச்சோடு செய்ய நினைக்கிறோம். அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள். மாதந்தோறும் ஆசிரியர் பக்கத்தில் ஒரு மாத ஊழிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். விரைவில் அதையும் செயலில் கொண்டு வர உள்ளோம்.

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, மற்ற மொழியினரும் நாம் வெளியிடும் செய்தியின் மூலம் பயன் பெறும் வகையில், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட ஆடியோ செய்திகளை வெளியிட விரும்புகிறோம்.

இன்று வரை இணையதளத்திற்கு அளித்து வரும் வரவேற்பிற்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, அதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். நம் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளைப் படித்து பயன் பெற, எந்தவிதமான கட்டணமோ, காணிக்கையோ வசூலிப்பது இல்லை. எனவே தைரியமாக உங்கள் நண்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ளலாம்.

கர்த்தருடைய ஊழியத்தில் தொடர்ந்து முன்னேறவும், மற்றவர்களுக்கு அதற்கு உதவும் பாலமாக விளங்கவும், எங்களைத் தொடர்ந்து ஜெபத்தில் தாங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்

www.arisenshine.in குழு.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்