ஒரு மின்-அஞ்சல் அனுப்புக
(விருப்பத்தேர்வு)
நானாவிதத் தகவல்:

“ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு

ஜெபிக்காத மனிதன் உயிரில்லாத உடல்”

என்ற ஒரு வாய்மொழி சொல்லை நம்மில் அநேகரும் கேட்டிருக்கிறோம். கூரை இல்லாத வீடு என்பது பாதுகாப்பற்ற நிலையை குறிக்கிறது. அதேபோல உயிரில்லாத உடல் இருந்தும் பயனற்றது. மற்றவர்களுக்கு நாற்றம் வீச தொடங்கிவிடும். எனவே நம் வாழ்க்கையில் ஜெபம் இல்லாவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த பாதுகாப்பும் இல்லாமல், மரித்த நிலவரத்திற்கு தள்ளப்பட நேரிடும் என்பதை உணர முடிகிறது. 

சிலர் தங்கள் குடும்பத்திற்காகவும், தனக்காகவும் மட்டும் ஜெபித்து கொண்டு, ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று விடுகிறார்கள். மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற வாஞ்சை பலருக்கு இருந்தாலும், அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் கிடைப்பது இல்லை. சிலருக்கு அநேக தேவைகள் இருக்கிறது, ஆனால் ஜெபிக்க ஆட்கள் இல்லை என்ற குறைப்பாடு உள்ளது. எனவே நம் இணையதளத்தின் மூலம் ஜெப தேவைகளை பெற்று, அதற்காக ஜெபிக்க உள்ளோம். ஜெபிக்க வாஞ்சை உள்ளவர்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளலாம்.

யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்த போது, தனது கட்டுகளிலிருந்து விடுதலை பெற்றான். அதேபோல நாமும் மற்றவர்களுக்காக ஜெபித்தால், நமது தேவைகளை தேவன் சந்திப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே நாம் ஒருமித்து ஜெபித்து பலருக்கும் ஆசீர்வாதமாக இருப்போம்.

குறிப்பு: உங்கள் ஜெப தேவைகளை எங்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம். இதற்கு contant us – பகுதியில் உள்ள தொடர்பு படிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஜெப விண்ணப்பங்களை தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் போதுமானது. எங்கள் ஜெப குழுவினருடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறார்கள், இணையதளத்தில் வெளியிடும் ஜெப குறிப்புகளை பார்த்து ஜெபிக்கலாம்.

- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்