தேவ வசனம் வல்லமை மிகுந்தது என்று பல இடங்களில் தேவ ஊழியர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அதை அந்த அளவிற்கு நம்பியது இல்லை. ஒரு வேத வசனத்தின் மூலம் பெரிய அற்புதங்கள் நடக்குமா என்ற சந்தேகம் என் மனதிற்குள் வெகுநாட்களாக இருந்து வந்தது.

இந்நிலையில் எங்கள் தேவாலயத்தில் ஒருவர் கூறிய திடுக்கிட வைத்த சாட்சி, மேற்கூறிய பல ஆண்டு காலமாக என் மனதில் இருந்த சந்தேகத்திற்கு பதிலாக அமைந்தது. என்னைப் போல இரட்சிக்கப்பட்ட பலருக்கும் அது பயன்படும் என்று நம்புகிறேன். அந்த சகோதரன் கூறிய சாட்சியை அப்படியே கூறுகிறேன்.

இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், பல பாவ பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தேன். தேவனை அறியாமல், பாரம்பரியமாக வழிபட்டு வந்த பல தெய்வங்களை வணங்கி வந்தேன். இந்நிலையில் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது காய்ச்சலும், சோர்வும் உண்டானது.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, எனக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டிய காலம் கடந்துவிட்டதாகவும் டாக்டர்கள் கூறினார்கள். இதனால் விரைவில் நான் மரித்து விடுவேன் என்று தெரிந்து, துக்கப்பட ஆரம்பித்தேன்.

இவ்வளவு நாட்களாக நான் வணங்கி வந்த பாரம்பாரிய தெய்வங்கள், என்னை காப்பாற்றவில்லையே? நான் யாரை இனி நம்புவது என்று மனதில் பெரும் வியாகுலத்தோடு, மருத்துவமனை கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திறக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஜன்னல் வழியாக லேசான பாடல் சத்தம் கேட்டது.

மற்றொரு சாட்சி: குடும்ப ஜெபத்தின் மேன்மை

அதை உற்று கவனித்த போது, ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பாடப்படும் பாடல் என்பது தெரிந்தது. எனவே அதை தொடர்ந்து கேட்டேன். அப்போது அந்த பாடலில் வந்த வரிகள், எனக்குள் பெரிய ஆறுதலை அளிப்பதாக இருந்தது.

பாடலை தொடர்ந்து, யாரோ ஒரு நபர் மைக்கில் பேச ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த போது, ஒரு நோயாளியை குணப்படுத்தியது குறித்து பேசிக் கொண்டிருந்தார். அந்த வார்த்தைகளை கேட்க, கேட்க, இயேசுவின் மீது எனக்குள் ஒரு நம்பிக்கை உண்டானது.

இவ்வளவு நாட்களாக எவ்வளவோ தெய்வங்களை வணங்கினேன். ஆனால் எனக்கு கஷ்டம் வந்த போது, யாரும் உதவவில்லை. இப்போது இயேசு எனக்கு உதவி செய்வாரா? என்ற ஏக்கம் ஏற்பட்டது. முடிவில் இயேசுவிடம் என்னை குணமாக்குமாறு கேட்க ஆரம்பித்தேன்.

தேவ வசனத்தை பேசிய போதகர் கடைசியாக, தேவனிடம் இருந்து சுகத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் விசுவாசத்தோடு ஜெபிக்குமாறு கூறினார். அப்போது இயேசுவிடம் உருக்கமாக வேண்டினேன்.

மற்றொரு சாட்சி: இயேசுவின் சுகமாக்கும் வல்லமை இன்றும் குறையவில்லை

அந்த போதகர் கூறிய வசனம் என் காதுகளில் தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்க அந்த வினாடியிலேயே, என் உடலில் ஒரு புதிய பலம் ஏற்பட்டது. அத்தனை நாட்களாக எனக்குள் இருந்த பலவீனம் மாறி, ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். இது குறித்து என்னை பரிசோதிக்க வந்த மருத்துவர்களிடம் கூறினேன்.

என் பேச்சை கேட்டு ஆச்சரியமடைந்த டாக்டர்கள், என்னை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தினர். புற்றுநோய் முதிர்ந்த நிலையில் மரண நாட்களை எண்ணிக் கொண்டிருந்த எனக்குள், புற்றுநோய்க்கான எந்த அறிக்குறியும் இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. அதில் ஆச்சரியமடைந்த டாக்டர்கள், உடனடியாக என்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.

மருத்துவமனையில் இருந்தவாறு நான் கேட்ட வேத வசனம், என்னுடைய மரித்து கொண்டிருந்த உடலில் புதிய ஜீவனை அளித்தது என்று உணர்ந்தேன். இயேசு இன்றும் உயிருடன் இருக்கிறார். அவர் இன்றும் குணப்படுத்துகிறார் என்பதற்கு நான் ஜீவனுள்ள சாட்சியாக நிலைநிற்கிறேன்.

இந்த சாட்சியை படித்து கொண்டிருக்கும் நீங்கள் எந்த மாதிரியான வியாதியில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும், உங்களை குணப்படுத்த இயேசு வல்லமையுள்ளவராக இருக்கிறார். அவரது வார்த்தையில் ஜீவன் உண்டு. அவர் நம்பிக்கையாக இருக்கும் போது, நம் வாழ்க்கையில் எதிர்பாராத அற்புதங்களை காண முடியும். என் வாழ்க்கையில் தேவன் செய்த அற்புதத்திற்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை செலுத்துகிறேன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்