நோக்கம்:

சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.(மத்தேயு.19:14)

இந்த வார்த்தைகளை கூறியவர், பூமிக்கு வார்த்தையாக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. ஆம். அழிந்த போகிற ஆத்மாக்களை சின்ன வயதிலிருந்தே கர்த்தருக்கு நேராக வழி நடத்திவிட்டால், அவர்களை பிசாசின் வலையிலிருந்து காப்பாற்றி விடலாம். இதை மனதில் கொண்டு, தேவன் காட்டிய தரிசனத்தின் அடிப்படையில்தான் ஞாயிறு பள்ளி ஊழியத்தை தொடங்கினோம்.

திட்டம்:

பெங்களூர் நகரில் பல இடங்களில் தொடங்கப்பட்டு, சகோதரர்களின் ஜெபத்தினாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமும், இந்த ஊழியம் ஜெயமாக நடைபெறுகிறது. இந்த ஊழியத்தின் மூலம் தேவ ஊழியர்கள், சாட்சியுள்ள தேவ பிள்ளைகள், தேவ பயமுள்ள குடும்பங்கள், சபைகள் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எங்களின் இலக்காக வைத்துள்ளோம்.

தேவைகள்:

இந்த ஊழியத்தில் எங்களை ஜெபத்தில் தாங்க, எண்ணற்ற ஜெப வீரர்கள் தேவை. ஆத்ம பாரமுள்ளவர்களின் ஜெபம், கர்த்தரின் செவிக்கு விரைவில் எட்டி சேரும் என்று நம்புகிறோம். மேலும் கர்த்தருக்காக பிள்ளைகளின் மத்தியில் ஊழியம் செய்ய விரும்புவோருக்கு தேவன் மனதில் ஏவுதல் அளித்தால் எங்களை தொடர்பு கொண்டு, இந்த ஊழியத்தில் இணையலாம்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்