இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம். 133.1)

 ஆத்ம பாரம் கொண்ட ஒரு சகோதரர் மூலம் சிறிய அளவில் துவக்கப்பட்ட இந்த ஊழியம் இன்று பலர் இணைந்து செய்து வருகின்றனர். இதற்கு தேவனின் அன்பும், அழைப்புமே காரணம்.

துவக்க நிலை:

ஒரு தெளிவான தேவ தரிசனத்தின் அடிப்படையில் சிறிய அளவில் ஞாயிறு பள்ளி ஊழியம் ஒன்று வீட்டில் துவக்கப்பட்டது. பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஞாயிறு பள்ளி ஊழியத்தை அருகில் இருந்த ஒரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிறு பிள்ளைகளுக்கு ஞாயிறு பள்ளி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், எதிர்ப்புகள் தலைவிரித்தாடியது. இதில் அந்த ஊழியம் முடிவுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சிய நேரத்தில், தேவன் புதிய பாதைகளை திறந்தார்.

வளர்ச்சி:

ஒரே இடத்தில் நடத்தப்பட்டு வந்த ஞாயிறு பள்ளி ஊழியம் 2 இடங்களுக்கும் பின்னர் அது 3 ஆக வளர தொடங்கியது. அந்த நேரத்தில் தனியே செயல்பட்ட சகோதரனுக்கு துணையாக, சில ஆத்மதாகம் கொண்ட சகோதரர்களையும் தேவன் எழுப்பினார். அதன் தொடர்ச்சியாக இந்த ஊழியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்த தேவன் உதவி வருகிறார்.

இந்த ஊழியத்திற்கு எதிராக எத்தனையோ எதிர்ப்புகள், சோதனைகள், போராட்டங்கள் வந்த போதிலும் கர்த்தர் எங்கள் பட்சத்தில் இருந்தபடியால் நாங்கள் அசைக்கப்படவில்லை. கர்த்தருக்கே சகல துதியும் கனமும் மகிமையும் செலுத்துகிறோம். ஆமேன்.

ஊழியத்தின் தன்மை:

 இந்த ஊழியம் எந்த தனிப்பட்ட லாபத்திற்காகவோ, புகழுக்குக்காகவோ துவங்கப்பட்டது அல்ல. மேலும் எந்த சபையையோ, எந்த ஊழியத்தையோ சார்ந்ததும் அல்ல.

கடந்த வார செய்திகள்