அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்நியாயாதிபதிகள்:21.25

இஸ்ரவேல் மக்களை பல்வேறு தரப்பினர் வழிநடத்தி உள்ளனர். இஸ்ரவேல் என்ற பெயருக்கு சொந்தக்காரரான யாக்கோபின் தலைமையில் ஒரு குடும்பமாக எகிப்திற்கு போனார்கள். அங்கு யோசேப்பின் ஆதரவில் பலுகி பெருகி, லட்சக்கணக்கான மக்களாக மாறினார்கள்.

...நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.” ரூத்:3.9

பரிசுத்த வேதாகமத்தில் பெண்களின் பெயர்களில் வரும் ரூத் புத்தகம், அந்நிய ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எப்படி இஸ்ரவேல் வம்சத்திற்குள் இணைய முடியும் என்பதை காட்டுகிறது. இதனால் போவாஸை இயேசுவிற்கு, ரூத்தை கிறிஸ்துவின் சபைக்கும் நிழலாக கூறலாம்.

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே, உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” மத்தேயு:6.8

நாம் எவ்வளவோ காலமாக ஜெபிக்கும் காரியங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நம்மிடம் இன்று, தேவன் இந்த வார்த்தைகளைப் பேசுகிறார். இந்த வார்த்தைகளை இயேசு கூறுவதற்கு ஏதாவது பின்னணி இருக்கிறதா? என்றால், அநேக சம்பவங்களை வேதத்தில் காணலாம்.

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” கலாத்தியர்:3.6

விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிரகாமின் சந்ததியை குறித்து அவரது 75வது வயதில் வாக்குத்தத்தத்தை (ஆதியாகமம்:12.3,4) பெறுகிறார். 11 ஆண்டுகள் காத்திருந்தும் குழந்தையில்லை என்ற நிலை ஏற்பட்ட போது, மனைவி சாராளின் ஆலோசனையை கேட்டு பணிப்பெண் ஆகாரின் மூலம் இஸ்மவேலை (ஆதியாகமம்:16.16) பெறுகிறார்.

தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; ...தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்” 1சாமுவேல்:30.6

சவுலின் கீழ்படியாமையின் பலனாக, ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக தேவன் நியமிக்கப்படுகிறார். இந்நிலையில் தான் ராஜாவாக அபிஷேகம் பெற்றிருந்தாலும், தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட சவுலை கொன்றுவிட்டு தான் ராஜாவாக விரும்பாத தாவீதை, அந்த சவுல் கொலைச் செய்ய முயற்சிக்கிறார்.

கடந்த வார செய்திகள்