ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப் போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டை பண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்.” 1 சாமுவேல்:10.27

இஸ்ரவேல் மக்களின் கோரிக்கையை ஏற்று, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த சவுல், தீர்க்கத்தரிசி சாமுவேலின் மூலம் முதல் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தங்களுக்கு ராஜா கிடைத்த சந்தோஷத்தில் இருந்த இஸ்ரவேல் மக்கள், சவுலுக்கு காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் சவுல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதை பேலியாளின் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சவுலின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. புதிய ஏற்பாட்டின் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும், நாம் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறோம். இதற்காக பரிசுத்தாவினால் அபிஷேகம் செய்யப்பட்டு உள்ளோம்.

ஆனால் மேற்கண்ட அனுபவத்தை நாம் பெறுவதை, நம்மை சுற்றியுள்ள சிலரால் (பேலியாளின் மக்கள்) ஏற்றுக் கொள்ள முடியாமல், நம்மை எதிர்த்து பேசவும் செயல்படவும் செய்கிறார்கள். இந்நிலையில் யார் இந்த பேலியாளின் மக்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

பரிசுத்த வேதாகமத்தில் மொத்தம் 27 முறை பேலியாளின் மக்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 முறை, பயனற்ற, பிரயோஜனம் இல்லாத அல்லது மதிப்பற்ற மக்கள் என்பதை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற 10 இடங்களில் பிசாசின் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுகிறவர்களையும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுகிறவர்களையும் யாருக்கும் அடங்காதவர்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நம்மை சுற்றிலும் இருந்து, தேவனால் நமக்கு அளிக்கப்பட்ட வளர்ச்சியையும் ஊழியத்தையும் கேவலமாக பேசுபவர்கள், மேற்கண்ட பட்டியலில் இடம்பெற்றவர்களாக மட்டுமே இருப்பார்கள். ஏனெனில் அவர்களால் தேவனுடைய மேன்மையான அழைப்பை புரிந்து கொள்ள முடியாது. அதை உலகத்திற்கு ஏற்ப ஒப்பிட்டு பார்ப்பார்கள். தங்கள் எதிர்ப்பை நேரடியாக பேச்சிலும் செயலிலும் காட்டி விடுகிறார்கள்.

இந்த பேலியாளின் மக்களின் பட்டியலில் வருபவர்கள், நாம் இருக்கும் சபையிலோ, நாம் வாழும் பகுதியிலோ, பணிபுரியும் இடங்களிலோ இருந்து கொண்டு, நமக்கு கிடைக்கும் உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக உள்ளார்கள். ஏனெனில் இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய மக்களாக அழைக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அவர்களின் நடுவிலும் மேற்கூறிய சில பேலியாளின் மக்கள் இருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் தனக்கு எதிராக பேலியாளின் மக்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட சவுல், அவர்கள் மீது கோபப்பட்டு எதையும் செய்யவில்லை. அதைக் கேட்காதவன் போல இருந்துவிட்டான் என்கிறது தியான வசனம். எனக்கு எதிராக பேசிவிட்டார்களே? என்று ராஜ பதவிக்கு வந்த சவுல், தனது அதிகாரத்தை உடனே காட்டியிருந்தால், அடுத்து வந்த போருக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது, யாரும் வந்திருக்கமாட்டார்கள். எனவே சவுல் மவுனமாக இருந்துவிட்டார்.

நம் வாழ்க்கையிலும் இது போன்ற சூழ்நிலைகளில் நாம் மவுனமாக இருப்பதுதான் சிறந்தது. சவுல் காது கேளாதவன் போல இருந்த போது, அடுத்த அதிகாரத்தில் தேவ ஆவியினால் எதிரிகளை வீழ்த்தி வெற்றியுடன் நாடு திரும்புகிறார்கள். அப்போது சவுலுக்கு எதிராக பேசிய பேலியாளின் மக்களை கொலைச் செய்ய மற்றவர்கள் முயற்சிப்பதை காணலாம்.

நமக்கு தேவனால் அளிக்கப்பட்டிருக்கும் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தி கொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறும் போது, பலரும் எதிர்த்து வருவார்கள், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பேசுவார்கள். அவர்களை நாம் கண்டுகொள்ளாமல் விடும் போது, தகுந்த நேரத்தில் தானாக மறைந்து போவார்கள். நமக்கு இருக்கும் அதிகாரத்தை அவசரப்பட்டு பயன்படுத்தி, நம் மீதான தேவ நோக்கத்தையும் அதனால் வரும் வெற்றியையும் நாமாக கெடுத்து கொள்ளக் கூடாது.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள தேவனே, பாவிகளாக இருந்த எங்களை அழைத்து மேன்மையான வரங்களையும், கிருபையையும் தந்தீர். எங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த மேன்மைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பலரும் எங்களோடு இருப்பதை அறிகிறோம். அதற்காக வருத்தப்பட்டு அல்லது கோபத்தோடு எதிர்த்து நிற்காமல், சவுலை போல காது கேளாதவர்களாக இருக்க வேண்டும் என்று பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். அதன்மூலம் எங்களின் ஆவிக்குரிய யுத்தங்களில் வெற்றியைப் பெற்று முன்னேற உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்