தேசத்தின் இரட்சிப்பு:

நம் வாழும் தமிழகத்தையும், நம் நாடு இந்தியாவையும் தேவன் இரட்சிக்க வேண்டும். நாளுக்கு நாள் பாவம் பெருகி வரும் இந்தக் காலத்தில் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கும் தேவ ஊழியர்கள் எழும்ப வேண்டும்.

-----------------

சங்கர், பெங்களூரு.

சில குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்திற்கும் மேலாக கடன் வாங்கியுள்ளேன். இந்த கடன் பாரத்தில் இருந்து தேவன் என்னை விடுவிக்க வேண்டும். மேலும் எனது குடும்பத்தினர் எல்லாரும் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அவர்களும் தேவனை அறிந்து, இரட்சிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள்.

--------------------

ராணி, பெங்களூரு.

எனது உடலில் ஆங்காங்கே அலர்ஜி போல தோன்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். இது ஒரு வகை தோல் வியாதி என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். என்னை இரட்சித்த தேவன், இன்றும் சுகமாக்க வல்லவராக இருக்கிறார் என்பதை விசுவாசித்து, எந்த மருந்தும் நான் சாப்பிடவில்லை. தேவன் இந்த நோயிலிருந்து பூர்ண சுகமளித்து, என்னை ஒரு அற்புத சாட்சியாக நிறுத்த எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

“ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு

ஜெபிக்காத மனிதன் உயிரில்லாத உடல்”

என்ற ஒரு வாய்மொழி சொல்லை நம்மில் அநேகரும் கேட்டிருக்கிறோம். கூரை இல்லாத வீடு என்பது பாதுகாப்பற்ற நிலையை குறிக்கிறது. அதேபோல உயிரில்லாத உடல் இருந்தும் பயனற்றது. மற்றவர்களுக்கு நாற்றம் வீச தொடங்கிவிடும். எனவே நம் வாழ்க்கையில் ஜெபம் இல்லாவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த பாதுகாப்பும் இல்லாமல், மரித்த நிலவரத்திற்கு தள்ளப்பட நேரிடும் என்பதை உணர முடிகிறது. 

www.arisenshine.in என்ற இந்தக் கிறிஸ்துவ தமிழ் இணையதளத்திற்கு வந்துள்ள உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம்.

உலகமெங்கும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயன்படும் செய்திகள், சிந்தனைகள், தியானம், சாட்சிகள் ஆகியவற்றை வெளியிடும் நோக்கில் இந்த இணையதளம் இயங்கி வருகிறது.

இது எந்த சபையையோ, ஊழியத்தையோ சார்ந்தது அல்ல என்பதோடு, எந்த சொந்த ஆதாயத்திற்காகவும் நடத்தப்படுவது அல்ல.

எனவே இந்த இணையதளத்தில் வரும் செய்திகளைப் படித்து, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

- - - - - - - - -

இந்த இணையதளத்தில் வரும் செய்திகளைக் குறித்த உங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.

- - - - - - - -

இந்த வார வாக்குத்தத்தம்:

“கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; ...நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.” உபாகமம்:31.8

இந்த வார வேதப்பாடம்:

சோதனைகளில் நாம் அழிந்து போகாமல், தேவனால் உயர்த்தப்படுகிறோம் என்பதை உணர்த்து தேவ செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.

இந்த வார சாட்சி:

எங்கு போனாலும் ஜெபித்துவிட்டு சென்றால், தேவனால் காக்கப்படுகிறோம் என்பதை நிரூபித்த ஒரு சாட்சியை கிளிக் செய்து படியுங்கள்.

கொடும் பாவியான என்னை, இயேசு மீட்டார்

நாகப்பட்டினத்தில் இருந்து மதியழகன் என்ற சகோதரன் கூறுகிறார்...

எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்களை வணங்கும் ஒரு மார்க்கத்தில் அதிக நம்பிக்கைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்டேன். சிறு வயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், பள்ளிப் படிப்பைக் கூட நான் முடிக்கவில்லை.

கர்த்தருக்குள் அன்பானவர்களே...

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு, உங்களை மீண்டும் சந்திப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்த்தருடைய ஊழியத்தில் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட தேவன் கிருபையை அளித்து வருகிறார். அதற்கு உறுதுணையாக உங்களின் ஜெபங்கள் இருந்தன என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. நமது இணைதளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ஏற்பட்ட சில குளறுபடிகளின் காரணமாக, ஏறக்குறைய 1 மாதம் வரை எங்களால் தேவ செய்திகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதில் பெரும் துக்கம் அடைந்த நண்பர்கள் பலரும் இ-மெயில் மூலம் எங்களை தொடர்பு கொண்டு விசாரித்ததை எண்ணி ஆறுதல் அடைந்தோம். உங்கள் மதிப்பு மிகுந்த ஜெபத்தின் விளைவாக, திரும்பவும் அதே பெயரில் இணையதளத்தை தொடரவும், பேஸ்புக் பக்கத்தை இயக்கவும் தேவன் உதவி செய்தார். இதற்காக வாசகர்களுக்கும், அவர்களின் ஜெபத்தை கேட்ட தேவனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

நமது இணையதளத்தில் தினமும் தேவ செய்திகளை வெளியிடுமாறு, பல வாசகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். எங்கள் குழுவினர் செய்யும் ஞாயிறு பள்ளி ஊழியங்களில் அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதால், இணையதளத்தில் முழு மூச்சில் செயல்பட முடியவில்லை.

தேவ சித்தமானால் தினமும் தேவ செய்திகளை வெளியிடும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சி செய்கிறோம். அதை படிபடியாக மட்டுமே அடைய முடியும் என்று நம்புகிறோம். இதற்காக தொடர்ந்து ஜெபித்து கொள்ளுங்கள். மேலும் சமீப காலமாக எங்களின் பேஸ்புக் பக்கத்தில் தினமும் வேத வசனத்தை வெளியிடுவதில் பின்னடைவை சந்தித்து உள்ளோம். இதிலும் தொடர்ந்து உற்சாகத்தோடு செயல்பட விரும்புகிறோம்.

நமது இணையதளத்தில் வாரம் ஒரு புதிய அனுபவ சாட்சியை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக பலருடைய சாட்சிகளையும் திரட்டி வருகிறோம். எனவே நம் இணையதள வாசகர்களும், தங்களின் அனுபவ சாட்சிகளை எங்களுக்கு அனுப்பி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். எங்களுக்கு அனுபவ சாட்சிகளை அனுப்ப விரும்புபவர்கள் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும். இதை ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய ஏதாவது ஒரு மொழியில் டைப் செய்தோ அல்லது மொபைலில் வாய்ஸ் ரெக்காடிங் செய்தோ அனுப்பி வைக்கலாம். நாங்கள் அதை பரிசீலித்து, இணைதளத்தில் வெளியிடுகிறோம். தேவைப்பட்டால் மொழிப்பெயர்ப்பும் செய்து கொள்ளலாம்.

இதன்மூலம் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பயன் அளிக்கும் உங்கள் மதிப்பு மிகுந்த சாட்சிகள், உலகின் எல்லா திசைகளையும் சென்று பயன் அளிப்பதாக அமையும்.

நாங்கள் வெளியிடும் செய்திகளை குறித்து ஏற்படும் சந்தேகங்களையும், கருத்துகளையும், பலரும் பேஸ்புக் பக்கத்தில் சாட்டிங்கில் வந்து கேட்கிறார்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம் என்றாலும், இது குறித்து மேற்கண்ட எங்களின் இ-மெயில் முகவரிக்கு உங்கள் கடிதங்களை (இ-மெயிலாக) எழுதினால், எங்களுக்கு எளிதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்.

எங்களின் துவக்கம் அற்பமாக இருந்தாலும், முடிவு சம்பூரணமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஞாயிறு பள்ளி ஊழியத்தில் அதிக வளர்ச்சியை காண முடிகிறது. சமீபத்தில் இரு புதிய இடங்களில் ஞாயிறு பள்ளி ஊழியத்தை துவங்க தேவன் உதவி செய்தார். எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள இந்த ஊழியத்தை உண்மையோடும், உத்தமத்தோடும் செய்ய தேவன் கிருபை தரும்படி ஜெபித்துக் கொள்ளுங்கள்.

சமீபகாலமாக எங்களோடு தொடர்புக் கொள்ளும் பலரும், நீங்கள் எந்த சபையை சேர்ந்தவர்கள் என்று கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இதற்கான பதிலை அளித்தாலும், பொதுவாக அதற்கான பதிலை வெளியிட விரும்புகிறோம். எங்களின் ஊழியம் எந்த சபையோடும் ஐக்கியம் கொண்டது அல்ல. யாருடைய தனிப்பட்ட லாபத்திற்காகவும் துவக்கப்பட்டது அல்ல.

தேவனிடம் இருந்து கிடைத்த சரியான வழிநடத்துதலை ஏற்று, நாங்கள் ஊழியங்களை செய்து வருகிறோம். எனவே ஊழியங்களுக்கான எல்லா தேவைகளையும் தேவனே சந்திக்கிறார். இதனால் நாங்கள் யாரிடமும் காணிக்கையோ, பணமோ, பொருட்களோ வாங்குவது இல்லை. எங்களின் ஊழியத்தின் மூலம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்பவர்கள், தேவனுக்கு நன்றிகளை செலுத்துங்கள்.

அதே நேரத்தில் எங்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், எங்களுக்கும் இ-மெயில் மூலம் தெரியப்படுத்துங்கள். இதன்மூலம் இன்னும் உற்சாகத்தோடு தேவனுக்காக செயல்பட முடியும் என்று நம்புகிறோம். எங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர் என்பதால், முடிவு பரியந்தம் நடத்துவார் என்று விசுவாசிக்கிறோம்.

நமது இணையதளத்தில் வரும் நாட்களில் பல புதிய பகுதிகளை துவங்க வாஞ்சிக்கிறோம். எனவே உங்கள் ஜெபத்தில் எங்களை நினைத்து கொள்வதோடு, நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

- ஆசிரியர், Arisenshine Team.

கடந்த வார செய்திகள்